நடவடிக்கை செய்தி
தீ கட்டுப்படுத்தப்பட்ட “New Diamond” கப்பலின் நிலையை ஆய்வு செய்ய வெளிநாட்டு மற்றும் இலங்கை கடற்படை நிபுணர் குழுக்கள் கப்பலுக்குள் நுழைந்தனர்.
வெடிபொருள் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்
MT New Diamond கப்பலின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வு படுத்த ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு

MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை பேரழிவு மேலாண்மை குழுக்கள் இன்று (2020 செப்டம்பர் 09) வெற்றிகரமாக கட்டுப்படுத்தின. அதன்படி, பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்காக கப்பலின் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தின் மூன்று (03) வல்லுநர்கள் பேரழிவிற்குப் பிறகு முதல்முறையாக கப்பலில் ஏறியதுடன் அவர்கள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு குறித்த கப்பலை விட்டு வெளியேறினர். இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் நிபுணர்களின் குழுவும் பாதிக்கப்பட்ட கப்பலுக்கு ஏறி அடுத்த நடவடிக்கைகளுக்கு மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் கப்பலின் தற்போதைய சேதம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களினால் விளக்கப்படும்.
09 Sep 2020
செய்தி வெளியீடு
பாதகமான வானிலை காரணமாக “MT New Diamond“ கப்பலில் பரவிய தீ ஒருங்கிணைந்த பேரழிவு மேலாண்மை குழுவின் நடவடிக்கைகளினால் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது

பாதகமான வானிலை காரணமாக 2020 செப்டம்பர் 07 அன்று MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீ இன்று விடியற்காலையில், பேரழிவு முகாமைத்துவ குழுக்களால் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் இருந்து இதுவரை தீப்பிழம்புகள் அல்லது புகை எதுவும் காணப்படவில்லை, மேலும், ஒரு டக் படகைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட கப்பல் மீண்டும் ஆழ்கடலுக்கு இழுக்கப்படுகின்றன. அதன்படி, பாதிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் இப்போது சங்கமங்கந்த பகுதியில் இருந்து சுமார் 37 கடல் மைல் தொலைவில் உள்ளதுடன் கரடுமுரடான கடல் சூழ்நிலையில் மற்றும் பலத்த காற்று மத்தியில் இந்த பேரழிவு மேலாண்மை நடவடிக்கை தொடர்கிறது.
09 Sep 2020
செய்தி வெளியீடு
சீரற்ற வானிலை காரணமாக “MT New Diamond“ கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வர கூட்டு பேரழிவு மேலாண்மை குழு நடவடிக்கையைத் தொடர்கிறது
கடற்படை நடவடிக்கைகள் மூலம் 12 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1800 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

சீரற்ற வானிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் பிற பங்குதாரர்களுக்கு சொந்தமான கப்பல்கள், விமானங்கள் மற்றும் டக் படகுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த தீ விபத்து நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
08 Sep 2020
“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1630 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

MT New Diamond எரிபொருள் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்றைய தினம் சுமார் 1500 மணியளவில் பேரழிவு மேலாண்மை குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் கப்பலின் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களினால் தீ மீண்டும் வருவதைத் தடுக்க இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
07 Sep 2020
செய்தி வெளியீடு
“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1230 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.