நடவடிக்கை செய்தி

ரூ .71 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

பருத்தித்துறைக்கு வடக்கு கடல் பகுதியில் இன்று (2021 ஜூன் 14) நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 237 கிலோ மற்றும் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் மூன்று (03) சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

14 Jun 2021

ரூ .1758 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான சுமார் 219 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் பறிமுதல்

கடற்படையினரால் வெலிகம, பொல்வதுமோதர கடற்கரை பகுதியில் 2021 ஜூன் 12 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 219 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

13 Jun 2021

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற பீடி இலைகள் மற்றும் உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 514 கிலோகிராம் பீடி இலைகள் (Kendu Leaves) மற்றும் சுமார் 70 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் (01) இன்று (ஜூன் 08, 2021). கைது செய்யப்பட்டார்.

08 Jun 2021

கடலில் சுகவீனமுற்ற நிலையில் இருந்த மேலும் ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

பேருவலைக்கு தென்மேற்கே சுமார் 85 கடல் மைல் (சுமார் 157 கி.மீ) ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த மற்றொரு மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்கு அனுப்ப இன்று (2021 ஜூன் 07) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

07 Jun 2021

முப்பத்திரண்டு (32) கடற்படை நிவாரணக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளில்

கடும் மழை காரணமாக மேற்கு, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள ஆபாயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பு, கம்பஹ, களுத்துறை, காலி மற்றும் இரத்னபுரி மாவட்டங்களை உள்ளடக்கி 32 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது. இந்த நிவாரண குழுக்கள் இன்றைய தினமும் தொடர்ந்து (2021 ஜூன் 07) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது.

07 Jun 2021

ரூ .28 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைது

நகர்கோவில் கடற்கரை பகுதியில் இன்று (2021 ஜூன் 07) நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 96 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

07 Jun 2021

MV X-PRESS PEARL கப்பலின் கசிவுகள் தொடர்பில் கடற்படையின் சுழியோடிகள் சிறப்பு ஆய்வு

தீ அனர்த்தத்திற்கு உள்ளான MV X-PRESS PEARL கப்பலில் ஏதேனும் கசிவுகள் ஏற்படுகின்றதா என்பது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் கடற்படையின் அனுபவம் வாய்ந்த சுழியோடிகள் இன்று (2021 ஜூன் 06) ஈடுபட்டுள்ளனர்.

06 Jun 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹ மாவட்டத்தில் மேலும் 27 நபர்கள் கடற்படையினரால் மீட்பு

கடற்படை நிவாரண குழுக்கள் இன்று (ஜூன் 06, 2021) கம்பஹ மாவட்டத்தில் ஜா-எல பகுதியில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 27 நபர்களை மீட்டனர்.

06 Jun 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹ மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 66 நபர்கள் கடற்படையினரால் மீட்பு

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு, தெற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களை உள்ளடக்கி 33 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது. அதன் படி இன்று (2021 ஜூன் 05) பிற்பகல் கடற்படையினரால் கம்பஹ மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 66 பேர் மீட்கப்பட்டனர்.

05 Jun 2021

‘345 கடல் மைல் தூரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி’என்ற தலைப்பின் கீழ் 2021 ஜூன் 04 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீடுயுடன் தொடர்பானது

இலங்கையின் தென்கிழக்கில் உள்ள பெரிய இராவண கலங்கரை விளக்கத்திலிருந்து (Great Basses) சுமார் 345 கடல் மைல் (சுமார் 638 கி.மீ) தூரத்தில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப கடற்படை இன்று (ஜூன் 05, 2021) நடவடிக்கை எடுத்துள்ளது.

05 Jun 2021