நடவடிக்கை செய்தி

காலி மாவட்டத்தில் வெள்ள ஆபாயம் கொண்ட பல பகுதிகளில் கடற்படை நிவாரண குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன

காலி மாவட்டத்தில் வெள்ள ஆபாயம் கொண்ட நாகொட மற்றும் தவலம பிரதேச செயலகங்களுக்கு கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் நான்கு குழுக்கள் நிறுவ இன்று (2021 மே 13) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

13 May 2021

மோசமான வானிலை குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழையால் எதிர்கால வெள்ள அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (2021 மே 13) களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கல பிரதேச செயலக பகுதிக்கு கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் இரு குழுக்கள் நிறுவ கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

13 May 2021

கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவொன்று இரத்தினபுரியில் நிருவப்பட்டது

வெள்ள அவசரகாலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் நோக்கில், கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவொன்று 2021 மே 11 அன்று இரத்தினபுரி புதிய நகரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

13 May 2021

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஒருவருடன் கடத்தல்காரர்கள் கடற்படையினரால் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் சென்று மீண்டும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிய படகொன்று மூலம் மன்னார் பகுதிக்கு வந்துக் கொண்டிருந்த ஒருவருடன் குறித்த படகில் இருந்த இருவர் மற்றும் இந்த கடத்தல் செயலில் ஈடுபட்ட மேலும் 02 சந்தேக நபர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

12 May 2021

ரூ .70 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் வெங்காயம் விதைகள் வட மேற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2021 மே 07 அன்று இலங்கையின் வடமேற்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 235 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மற்றும் சுமார் 522 கிலோகிராம் வெங்காயம் விதைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

08 May 2021

சட்டவிரோத போதைப்பொருட்கள் கொண்ட மூன்று சந்தேக நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது

கடற்படையினர் 2021 மே 03 ஆம் திகதி ராஜகிரிய பகுதியில் நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 311 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் (Crystal methamphetamine) மற்றம் 47 கிராம் 250 மில்லிகிராம் ஹஷிஷ் போதைப்பொருட்களுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 May 2021

11 இந்திய மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைவதை கடற்படையால் தடுக்கப்பட்டது

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை வடக்கு கடல் பகுதியில் சிறப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்வதன் மூலம், சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைய முயச்சித்ததாக சந்தேகப்படுகின்ற 86 நபர்களுடன் 11 இந்திய மீன்பிடிக் படகுகளை இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுக்க இன்று (2021 மே 04) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

04 May 2021

ரூ .55 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவை வட கடலில் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து இன்று (2021 மே 03) யாழ்ப்பாணம் காங்கேசந்துரை கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது 183 கிலோகிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

03 May 2021

செய்தி வெளியீடு


சட்டவிரோத இடம்பெயர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக கடல் எல்லையின் பாதுகாப்பை பலப்படுத்துதல்

கடல் வழிகள் மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு குடியேறியவர்கள் வருகையால் நாட்டில் கோவிட் 19 தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் இதைக் கட்டுப்படுத்த, கடற்படை ரோந்துப் பணிகளை24 மணி நேரமும் அதிகரிப்பதன் மூலம் வடமேற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.

03 May 2021

காலி, வக்வெல்ல பாலத்தில் சிக்கிய குப்பை கூளங்கள் கடற்படையினரால் அகற்றப்பட்டது

காலி, வக்வெல்ல பகுதியில் கின் கங்கை குறுக்கே உள்ள பாலத்தில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2021 மே 01 ஆம் திகதி ஈடுபட்டுள்ளனர்.

02 May 2021