நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 176 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் மற்றும் சீதுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2023 ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி மாலை சீதுவ, நைனமடம பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 176 கிலொ கிராம் பீடி இலைகள் கைப்பற்றனர்.

24 Aug 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 2447 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினரால் 2023 ஆகஸ்ட் 22 மற்றும் இன்று (23 ஆகஸ்ட் 2023) புத்தளம், பாலவிய, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்ட சுமார் 2447 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த நடவடிக்கைகளின் போது, இந்த சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய 01 சந்தேக நபர் மற்றும் 01 லொறியும் கைது செய்யப்பட்டன.

23 Aug 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 99 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் புத்தளம் தடாகத்தில் வைத்து கடற்படையினரால் கைது

புத்தளம் தடாகத்தில் மட்டத்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2023 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயற்சித்த சுமார் தொண்ணூற்றொன்பது (99) கிலோகிராம் பீடி இலைகளுடன் (ஈரமான) எடை) இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைது செய்யப்பட்டுள்ளன.

22 Aug 2023

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மாலை திருகோணமலை, கல்லராவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்தனர்.

22 Aug 2023

தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

இலங்கைக்கு தெற்கு கடல் பகுதியில், இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட மீனவரொருவரை கரைக்கு கொண்டு வந்து வைத்திய சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஆகஸ்ட் 21) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

21 Aug 2023

சட்டவிரோதமாக விற்பனைசெய்ய தயாரிக்கப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் அனுராதபுரம் உணவு மற்றும் போதைப்பொருள் ஆய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து 2023 ஆகஸ்ட் 14 ஆம் திகதி மெதவச்சிய வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக விற்பனை செய்ய தயாரிக்கப்பட்ட பதினோராயிரத்து முந்நூற்று எழுபத்தேழு (11377) Pregabalin Capsules 150 mg வகையின் மாத்திரைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

15 Aug 2023

318 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி சேரக்குளிய கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது அந்த கடற்கரை பகுதிக்கு மிதந்து வந்த முந்நூற்று பதினெட்டு (318) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான) எடை) கைப்பற்றினர்.

13 Aug 2023

தெற்கு கடற்பரப்பில் தீப்பிடித்த உள்நாட்டு மீன்பிடி படகில் இருந்த 07 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

காலி கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 58 கடல் மைல் (சுமார் 107 கி.மீ) தொலைவில் இலங்கைக்கு மேற்கு ஆழ்கடலில் தீப்பிடித்த பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படையினர் 2023 ஆகஸ்ட் 11 ஆம் திகதி மேற்கொன்டுள்ளனர். குறித்த மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஏழு (07) இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படை கப்பல் கஜபாகு மூலம் இன்று (2023 ஆகஸ்ட் 12) காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

12 Aug 2023

75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் 2023 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 227 கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் லொறி வண்டியொன்று (01) கைது செய்தனர்.

06 Aug 2023

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, நிலாவேளி மற்றும் லங்காபடுன கடற்பகுதியில் 2023 ஓகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்கள் பயன்படுத்தி மற்றும் சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்து (10) பேர், மூன்று (03) டிங்கி படகுகள் , சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் கடல் அட்டைகள் நூற்று பதினாறுடன் (116) சுழியோடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

05 Aug 2023