நடவடிக்கை செய்தி

தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் சிக்கிய கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு

காலி, பத்தேகம பகுதியில் கிங் கங்கை ஊடாக கட்டப்பட்ட தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2023 ஜூன் 12 ஆம் திகதி ஈடுபட்டனர்.

13 Jun 2023

வர்த்தக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து திருகோணமலை ஏறக்கண்டி பிரதேசத்தில் 2023 ஜூன் மாதம் 12 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு சென்ற வாட்டர் ஜெல் எனப்படும் வணிக வெடி குச்சிகள் நாற்பத்தைந்துடன் (45) சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

13 Jun 2023

தடைசெய்யப்பட்ட 300 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் வவுனியாவில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2023 ஜூன் மாதம் 11 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக எடுத்துச் சென்ற Pregabalin வகையின் முந்நூறு (300) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

12 Jun 2023

நெடுந்தீவு படகுத்துரை நுழைவாயில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 38 பேர் கடற்படையினரால் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிக்கு அருகில் விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்த முப்பத்தெட்டு (38) பேர் மற்றும் அங்கு கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஜூன் 07) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

07 Jun 2023

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறைக்கு அப்பால் கடற்பரப்பில் 2023 ஜூன் 06 ஆம் திகதி பகல் வேளையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு பேர் (07), ஒரு டிங்கி (01), சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது.

07 Jun 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கடற்படையின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகள்

மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கல, பதுரலிய, லத்பந்துர மற்றும் வலல்லாவிட்ட பிரதேசங்களுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்துக்கும் கடற்படை ஐந்து (05) நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளதுடன் இன்று காலை (2023 ஜூன் 06) அந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

06 Jun 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கினர்

மோசமான வானிலை காரணமாக மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஜூன் 4 முதல் புலத்சிங்கள, பதுரலிய, லத்பந்துர மற்றும் கலவான ஆகிய இடங்களுக்கு கடற்படை நான்கு (04) நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது. தற்போது நிவாரணக் குழுக்கள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

05 Jun 2023

திருகோணமலை மொல்லிப்பொத்தானையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து திருகோணமலை மொல்லிப்பொத்தானை பகுதியில் 2023 ஜூன் மாதம் 01 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கிலோகிராமுக்கு (01) அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

02 Jun 2023

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதியில் இன்று (2023 ஜூன் 01) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மற்றும் மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தைந்து நபர்கள், ஆயிரத்து அறுபத்தெட்டு (1068) கடல் அட்டைகள், ஏழு (07) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

02 Jun 2023

2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து 2023 மே 31 ஆம் திகதி இரவு கொழும்பு 11, மல்வத்தை வீதிப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டாயிரம் (2000) வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்துச் சென்ற ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

01 Jun 2023