நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பகுதியில் 04 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், சங்குப்பிட்டி வீதித் தடுப்பில் 2023 மார்ச் மாதம் 01ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 04 கிலோ கிராம் கொண்ட இரண்டு (02) கேரள கஞ்சா பார்சல்களை பஸ் வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

02 Mar 2023

கல்பிட்டி குடாவ கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன.

கல்பிட்டி குடாவ கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலக் கூட்டத்தை பாதுகாப்பாக விடுவிக்க இன்று (2023 பிப்ரவரி 11) இலங்கை கடற்படையினர் உதவியுள்ளனர்.

12 Feb 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் சுறா துடுப்புகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (2023 பிப்ரவரி 09) அதிகாலை புத்தளம், சேரக்குளிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 239 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் (ஈரமான எடை) மற்றும் 921 கிலோகிராம் சுறா துடுப்புகள் (ஈரமான எடை) கொண்ட இரண்டு லொறிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

09 Feb 2023

10 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது

இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இனைந்து கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் 2023 பெப்ரவரி 06 ஆம் திகதி இரவு நடத்திய விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 10 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

07 Feb 2023

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேருடன் 17 வாலம்புரிகள், சுழியோடி உபகரணங்கள், 671 கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

05 Feb 2023

சுமார் 04 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம், அனலதீவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2023 ஜனவரி 28 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 12 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

29 Jan 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 1447 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பு கடல் மற்றும் களப்பு பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது

நீர்கொழும்பு கடற்பரப்பில் மற்றும் களப்பு பகுதியில் 2023 ஜனவரி 26ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படை நடவடிக்கைகளின் காரணத்தினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் கைவிடப்பட்ட 1447 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

27 Jan 2023

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் பிரவேசிக்க முயன்ற 38 இலங்கையர்கள் விமானம் மூலம் மீன்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்கள் 2023 ஜனவரி 25 ஆம் திகதி மாலை விமானம் மூலம் மீன்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப ரீயூனியன் தீவின் பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

26 Jan 2023

16 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் இன்று (2023 ஜனவரி 25) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 49 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) மூன்று சந்தேகநபர்கள் (03) மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றினர்.

25 Jan 2023

20 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம், அனலதீவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து இன்று (2023 ஜனவரி 24) காலை யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டுள்ளது.

24 Jan 2023