நடவடிக்கை செய்தி

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 டிசம்பர் 21 ஆம் திகதி காலை வெத்தலக்கேணி பகுதிக்கு வடகிழக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 Dec 2022

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த 4000 கிலோவுக்கும் அதிகமான பிடி இலைகள் கொண்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் வடமேற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினரால் 2022 டிசம்பர் 05 ஆம் திகதி இரவு இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 4000 கிலோ கிராமுக்கும் அதிகமான பிடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் எட்டு இந்தியர்கள் (08) கைது செய்யப்பட்டனர்.

06 Dec 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 20 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருகோணமலை, பவுல்முனைக்கு அப்பாற்பட்ட கிழக்கு கடற்பரப்பில் இன்று (2022 டிசம்பர் 05) அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருபது (20) பேரை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடிக் கப்பலொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

05 Dec 2022

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக வடக்கு கடற்பரப்பில் 2022 நவம்பர் 28 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 24 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் காரைநகர், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பாற்பட்ட இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டன.

29 Nov 2022

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 நவம்பர் 16 ஆம் திகதி மாலை வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 14 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், வெத்தலக்கேணி, மாமுனைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 Nov 2022

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 நவம்பர் 16 ஆம் திகதி மாலை வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 14 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், வெத்தலக்கேணி, மாமுனைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 Nov 2022

12 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது

இன்று (2022 நவம்பர் 14) அதிகாலை யாழ்ப்பாணம், கல்முனை முனைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 41 (ஈரமான ஏடை) கிலோ கிராமுக்கும் அதிகமான எடையுள்ள கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 Nov 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 2448 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பு தூவ பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் 2022 நவம்பர் 08 ஆம் திகதி காலை நீர்கொழும்பு, தூவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 2448 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகளுடன் இரண்டு (02) லொறிகள், ஒரு டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

09 Nov 2022

கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து வடக்கு கடலில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது 137 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து யாழ்ப்பாணம் நெடுந்தீவின் தென்கிழக்கு கடல் பகுதியில் இன்று (2022 நவம்பர் 09) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 458 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றை இலங்கை கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது.

09 Nov 2022

சுமார் 166 மில்லியன் ரூபா வீதி பெறுமதியான 08 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பேருவளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து 2022 நவம்பர் 07 ஆம் திகதி பேருவளை, டயஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது அப்பகுதியில் உள்ள தோட்டமொன்றில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 08 கிலோ 304 கிராம் (பொதி எடையுடன்) ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார். இதன் வீதி பெறுமதி 166 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

08 Nov 2022