நடவடிக்கை செய்தி

6,622 மற்றும் 13,244 மில்லியன் ரூபாய்களுக்கு இடையில் பெறுமதியான 331 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இலங்கையில் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று தென்கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து அம்பாந்தோட்டை மகா ராவணா கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் தென் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 6,622 மற்றும் 13,244 மில்லியன் ரூபாய்களுக்கு இடையில் வீதி பெறுமதியான 331 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று மற்றும் ஆறு (06) சந்தேக நபர்கள் 2022 நவம்பர் 05 ஆம் திகதி கைது செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் இன்று (2022 நவம்பர் 7,) காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன போதைப்பொருட்களை பார்வையிடுவதற்காக காலி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.

07 Nov 2022

தொடங்கொட, அகலிய மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை கடற்படையினரால் அகற்றப்பட்டது

பத்தேகம பிரதேசத்தில் கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொடங்கொட, அகலிய மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2022 ஒக்டோபர் 25, 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

29 Oct 2022

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து வடகடலில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கைப்பற்றப்பட்டது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக வடக்கு கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று 07 இந்திய மீனவர்களுடன் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு தெற்கு இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டன.

27 Oct 2022

அம்பாறை, களுகல்ஓய குளத்தின் மதகு கதவு திருத்தம் செய்வதற்கு கடற்படையின் பங்களிப்பு

அம்பாறை, களுகல்ஓய குளத்தின் மதகு கதவு செயற்பாட்டில் இல்லாத காரணத்தினால் அதனை கைமுறையாகச் செயற்படுத்துவதற்கு 2022 ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

25 Oct 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 45 பேர் காலி ஹபராதுவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 45 பேர் காலி ஹபராதுவ கரையோரப் பகுதியில் இன்று (2022 ஒக்டோபர் 23) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அந்த பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

23 Oct 2022

வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகள் 400 குச்சிகள் யாழ்ப்பாணம் ககரதீவுப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், ககரதீவில் இன்று (2022 ஒக்டோபர் 20) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தீவில் நுணுக்கமாக புதைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிமருந்து 400 குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

21 Oct 2022

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகு 03 இந்திய மீனவர்களுடன் கரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் கடலில் கைது செய்யப்பட்டன.

20 Oct 2022

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டி கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

கல்பிட்டி பாரமுனை கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடலில் மிதந்து கொண்டிருந்த 427 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.

08 Oct 2022

கல்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிய இழுவை படகில் இருந்த 38 உள்ளூர் சுற்றுலா பயணிகளை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

கல்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டுவ தீவுக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற போது கடல் நீர் கசிவு காரணமாக ஆபத்தில் சிக்கிய இழுவை படகொன்றில் இருந்த முப்பத்தெட்டு (38) பேரை இலங்கை கடற்படையினர் இன்று (2022 அக்டோபர் 01) மீட்டுள்ளனர்.

02 Oct 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 07 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 07 பேர் மன்னார் மணற்பரப்பைச் சூழவுள்ள கடற்பரப்பில் 2022 செப்டெம்பர் 28 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

29 Sep 2022