நடவடிக்கை செய்தி

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 செப்டம்பர் 19 ஆம் திகதி இரவு வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு கரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் கடலில் கைது செய்யப்பட்டன.

20 Sep 2022

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 செப்டம்பர் 06 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Sep 2022

சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளன

தீவை பாதித்துள்ள கடும் மழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் இன்று (ஆகஸ்ட் 31, 2022) மாலை 35 கடற்படை நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

31 Aug 2022

15 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம், தொண்டமனாறு பகுதியில் இன்று (2022 ஆகஸ்ட் 29) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 51 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று சந்தேகநபர்கள் இருவருடன் (02) கைது செய்யப்பட்டது.

29 Aug 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 44 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 44 பேர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு, வலைத்தோட்டம் கடற்பரப்பில் 2022 ஆகஸ்ட் 28 ஆம் திகதி இரவு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

29 Aug 2022

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 ஆகஸ்ட் 27 ஆம் திகதி இரவு தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) இந்திய மீனவர்களுடன் ஒரு இந்திய படகு கைது செய்யப்பட்டன.

29 Aug 2022

வத்தளை புபுதுகம சதுப்பு நிலப்பகுதியில் ஏற்பட்ட அவசர தீயை அணைக்க கடற்படையின் உதவி

வத்தளை புபுதுகம சதுப்பு நிலத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க உதவுமாறு கம்பஹ மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவினர் இன்று (2022 ஆகஸ்ட் 26) செய்த அறிவித்தலுக்கு இணங்க, கடற்படையினர் உடனடியாக மூன்று (03) தீயணைப்பு குழுக்களை அனுப்பி வைத்தனர்.

27 Aug 2022

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்று அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்து கடந்த 2022 ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய கடல் எல்லையில் அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வந்த அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கு சொந்தமான ஓஷன் சீல்ட் (Australian Border Force Cutter Ship - Ocean Shield) கப்பல் இன்று (2022ஆகஸ்ட் 05) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

05 Aug 2022

காலி பிரதேசத்தில் வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையில், பாலங்களை அண்மித்த பகுதியில் கடற்படையினரால் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கிங் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக காலி பிரதேசத்தில் அகலிய மற்றும் தொடம்கொட பாலங்களை அண்மித்த பகுதியில் சிக்கிய மரக்குற்றிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்றை 2022 ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கடற்படையினர் மேற்கொண்டனர்.

04 Aug 2022

சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த சுமார் 34 கிலோ 38 கிராம் (ஈரமான எடை) கொண்ட கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 04) அதிகாலை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றியுள்ளனர்.

04 Aug 2022