நடவடிக்கை செய்தி

பல கேரள கஞ்சா பொதிகள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டுவதற்காக 2022 ஜூலை 18 ஆம் திகதி மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, கச்சத்தீவு அருகே கடலில் மிதந்த சுமார் 30 கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

19 Jul 2022

வத்தளை ஹுனுபிட்டிய பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில் உள்ள இரும்பு சேகரிப்பு நிலையமொன்றில் 2022 ஜூலை 16 ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபடுகின்றனர்.

17 Jul 2022

சுமார் 19 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஜூலை 14 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூலை 15) யாழ்ப்பாணம், மண்டைதீவு, சம்பக்குளம் கடற்கரை, கல்முனை துடுவ கடற்கரை மற்றும் ஊர்காவற்துறை அல்லப்பிட்டி கடற்கரை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது சுமார் 65 கிலோ கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

15 Jul 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயன்று உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட 55 பேர் ஆழ்கடலில் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 390 கடல் மைல் (சுமார் 722 கி.மீ) தொலைவில், இலங்கைக்கு தென்கிழக்கு பகுதி ஆழ்கடலில் வீசிய புயலில் சிக்கி பாதிக்கப்பட்ட உள்நாட்டு பல நாள் மீன்பிடிக் கப்பலில் உயிருக்கு ஆபத்தில் இருந்த சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 55 பேர் இலங்கை கடற்படையினரால் 2022 ஜூலை 10ஆம் திகதி மீட்கப்பட்டதுடன், அவர்களை இன்று (2022 ஜூலை 12) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.

12 Jul 2022

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 2022 ஜூலை 11 ஆம் திகதி மாலை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

12 Jul 2022

சுமார் 67 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஜூலை 11) மன்னார், தேவம்பிட்டி கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 225 கிலோ கிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்துள்ளனர்.

12 Jul 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 78 பேர் கடற்படையினரால் கைது

மட்டக்களப்பு கடற்பகுதியிலும் மட்டக்களப்பு களுவன்கேணி கடற்கரை பகுதியிலும் 2022 ஜூலை மாதம் 10 ஆம் திகதி இரவு மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 78 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

11 Jul 2022

சுமார் 33 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஜூலை 10) மற்றும் 2022 ஜூலை 09 ஆம் திகதி மணல்மேடு மற்றும் ஊறுமலை கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 113 கிலோ 280 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

11 Jul 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 67 பேர் கடற்படையினரால் கைது

கல்முனை கிழக்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூலை 08) அதிகாலை மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 67 பேர் மீன்பிடி படகொன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

08 Jul 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 47 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூன் 27) இரவு மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

28 Jun 2022