நடவடிக்கை செய்தி

காலி தொடங்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது

காலி, தொடம்கொட பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே உள்ள தொடம்கொட பாலத்தில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் 2023 ஜனவரி 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

18 Jan 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

மன்னாருக்கு அப்பால் கடலில் 2024 ஜனவரி 16 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களுடன் இரண்டு (02) இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

17 Jan 2024

13 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரைப் பகுதியில் 2024 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பத்தி நான்கு (34) கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

16 Jan 2024

யாழ்ப்பாணம், வன்கலவாடி கடற்கரைப் பகுதியில் 02 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கைக் கடற்படையினர் 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் வங்கலவாடி கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஆறு (06) கிலோகிராம் (ஈரமான எடை) அளவிலான கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

15 Jan 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறைக்கு அப்பால் வடக்கடலில் 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடிப் படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

15 Jan 2024

10600 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து 2024 ஜனவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மிஹிந்தலை மற்றும் தலைமன்னார், கட்டுக்காரயன்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது பத்தாயிரத்து அறுநூறு (10600) போதை மாத்திரைகளுடன் (Pregabalin Capsules), இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் (01) கைது செய்யப்பட்டது.

14 Jan 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் 2024 ஜனவரி 13 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களுடன் மூன்று (03) இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

14 Jan 2024

வடமேற்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பத்தலங்குண்டுவ மற்றும் உச்சமுனே கடற்பரப்பில் 2023 டிசம்பர் 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு (08) பேருடன் மூன்று (03) டிங்கி படகுகள், 1995 கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

20 Dec 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையின் உதவி

இலங்கையை பாதித்துள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 2023 டிசம்பர் 12 முதல் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய பலகாவல பகுதிக்கு கடற்படை நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது. தற்போது அப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை கடற்படை நிவாரண குழுக்களால் வழங்கப்படுகின்றன.

19 Dec 2023

பழுதடைந்த பேராறு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகளை சரிசெய்வதற்கு கடற்படையின் உதவி

பேராறு நீர்த்தேக்கத்தின் பழுதடைந்த வான்கதவுகளை சரிசெய்வதற்காக இலங்கை கடற்படை சுழியோடி பிரிவின் நபர்கள் 2023 டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அர்ப்பணிப்பு பணியை மேற்கொண்டனர். வவுனியா மாவட்டத்தின் பேராறு குளம் பகுதியில் அமைந்துள்ள பேராறு நீர்த்தேக்கத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினால் தேங்கியுள்ள அதிகப்படியான மழைநீரை வெளியேற்றுவதற்கு வசதியாக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

18 Dec 2023