நடவடிக்கை செய்தி

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் 2022 மார்ச் 28 ஆம் திகதி இரவு மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு மீன்பிடி படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

29 Mar 2022

பொல்பித்திகம, மாஎலிய பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

பொல்பிதிகம மாஎலிய பிரதேசத்தில் உள்ள திகிலிய மலை வனச்சரகத்தில் 2022 மார்ச் 27 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது (2022 மார்ச் 28) தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படை தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

29 Mar 2022

1418 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கை காவல்துறைனருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் 2022 மார்ச் 27 ஆம் திகதி மன்னார் உப்புக்குளம் பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1418 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

28 Mar 2022

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

2022 மார்ச் 23 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகளுடன் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

24 Mar 2022

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பாய்மர படகுக்காக கடற்படையின் உதவி

ஹம்பாந்தோட்டை பகுதிக்கு அப்பால் தெற்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பாய்மரப் படகொன்றை பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வர 2022 மார்ச் 22 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

23 Mar 2022

வணிக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

திருகோணமலை இரணைகேணி பகுதியில் 2022 மார்ச் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட 20 வாட்டர் ஜெல் குச்சிகள் (Water Gel) மற்றும் 25 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் ஆகியவையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

22 Mar 2022

மேலும் நொரோச்சோலையில் பல கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைது

இன்று (2022, மார்ச் 22) காலை நொரோச்சோலை மாம்புரி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டிருந்த சுமார் 41 கிலோ 540 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

22 Mar 2022

ரூ .52 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

மன்னார், ஒலுத்துடுவாய் கடற்பரப்பில் 2022 மார்ச் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 175 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு டிங்கி படகு (01) கடற்படையினர் கைது செய்தனர்.

18 Mar 2022

கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 24 கடல் மைல் (சுமார் 44 கி.மீ) தூரத்தில் கிழக்கு பகுதி கடலில் நோய்வாய்ப்பட்ட இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப கடற்படை 2022 மார்ச் 16 ஆம் திகதி இரவு நடவடிக்கை எடுத்துள்ளது.

17 Mar 2022

இந்திய - இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சி (SLINEX ) வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு இந்திய-இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சி (SLINEX) 2022 மார்ச் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினம் கப்பல்துறையில் மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் நடைபெற்றது. குறித்த பயிற்சிக்காக இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை கடற்படை கப்பல் சயுரல பங்கேற்றது.

11 Mar 2022