நடவடிக்கை செய்தி

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2023 ஜூன் 21 ஆம் திகதி இரவு வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நாங்கு இந்திய மீன்பிடி படகுகளுடன் 22 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு வட மேற்கு பகுதி அப்பால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 Jun 2023

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய பல நாள் மீன்பிடிக் படகொன்றுடன் 09 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் வைத்து கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவின் ஊரிமுனை கடற்பகுதியில் 2023 ஜூன் 20 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய பல நாள் மீன்பிடிப் படகொன்றுடன் 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

21 Jun 2023

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி மாமுனே கடற்பரப்பில் 2023 ஜூன் 16 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) நபர்கள், நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைது செய்யப்பட்டன.

17 Jun 2023

கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக முல்லைத்தீவு கோக்கிளாய் களப்பு மற்றும் ஜின்னபுரம் கடற்பகுதியில் 2023 ஜூன் 15 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள், 04 படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

16 Jun 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பீடி இலைகள் நெடுந்தீவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் 2023 ஜூன் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் கரை ஒதுங்கி உள்ள சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் எழுநூற்று இருபத்தி ஒன்பது (729) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கைது செய்யப்பட்டனர்.

16 Jun 2023

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 26 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூன் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் லங்காபடுன கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது உரிம நிபந்தனைகளை மீறி இரவு நேர சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தி ஆறு (26) பேர், ஒன்பது (09) படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைது செய்துள்ளனர்.

15 Jun 2023

தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் சிக்கிய கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு

காலி, பத்தேகம பகுதியில் கிங் கங்கை ஊடாக கட்டப்பட்ட தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2023 ஜூன் 12 ஆம் திகதி ஈடுபட்டனர்.

13 Jun 2023

வர்த்தக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து திருகோணமலை ஏறக்கண்டி பிரதேசத்தில் 2023 ஜூன் மாதம் 12 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு சென்ற வாட்டர் ஜெல் எனப்படும் வணிக வெடி குச்சிகள் நாற்பத்தைந்துடன் (45) சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

13 Jun 2023

தடைசெய்யப்பட்ட 300 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் வவுனியாவில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2023 ஜூன் மாதம் 11 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக எடுத்துச் சென்ற Pregabalin வகையின் முந்நூறு (300) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

12 Jun 2023

நெடுந்தீவு படகுத்துரை நுழைவாயில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 38 பேர் கடற்படையினரால் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிக்கு அருகில் விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்த முப்பத்தெட்டு (38) பேர் மற்றும் அங்கு கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஜூன் 07) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

07 Jun 2023