நடவடிக்கை செய்தி

101 சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் கந்தலையில் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி கந்தலை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த நூற்றி ஒரு (101) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

02 Feb 2025

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் 515 பாதணிகள் என்பன நொரோச்சோலையில் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் நொரோச்சோலை ஆலங்குடா கடற்பகுதியில் 2025 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி, மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட முட்பட்ட சுமார் 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் சுமார் 515 ஜோடி காலணிகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

02 Feb 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 1670 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் நீர்கொழும்பு கெபும்கொட பகுதி கடற்பரப்பில் 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்து அறுநூற்று எழுபது (1670) கிலோ (500) கிராம் பீடி இலைகள் கொண்ட டிங்கி படகு (01) ஒன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

02 Feb 2025