நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 2,040 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் புத்தளம் மற்றும் நொரோச்சோலை பகுதியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2024 செப்டெம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் புத்தளம் தீவு பாலாவிய மற்றும் நொரோச்சோலை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் இரண்டாயிரத்து நாற்பது (2,040) கிலோ கிராமிற்கும் அதிகமான பீடி இலைகளுடன் (ஈரமான எடை) லொறி வண்டியொன்றையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.

25 Oct 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகளுடன் 16 இந்திய மீனவர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம், கச்சத்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினாறு (16) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

24 Oct 2024

சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட 02 பேர் கிழக்கு கடலில் கடற்படையினரால் கைது

திருகோணமலை சல்லிக்கோவில் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் 2024 ஒக்டோபர் 21 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள், ஒரு (01) டிங்கி படகு, சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

23 Oct 2024

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் 1066 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் வடமேற்கு கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், புத்தளம் முதல் சிலாவத்துறை வரையிலான வடமேற்கு கரையோரப் பகுதி மற்றும் அதனைச் சார்ந்த கரையோரப் பகுதியிலும் 2024 ஒக்டோபர் மாதம் 10 முதல் 20 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1066 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

21 Oct 2024

06 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மணித்தளையில் கைது

இலங்கை கடற்படையினர், இலங்கை பொலிஸாருடன் இணைந்து இன்று 2024 ஒக்டோபர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம், சாவகச்சேரி மணித்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் பதினைந்து கிலோ ஐம்பத்தைந்து மில்லிகிராம் (15.055) கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

20 Oct 2024

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் கைது

இலங்கை கடற்படையினர், திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து 2024 ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி திருகோணமலை நொச்சிக்குளம் பிரதேசத்தில் நடத்திய விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்த முந்நூற்று பத்து (310) கிராம் பதினைந்து (15) மில்லிகிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

19 Oct 2024

சுமார் 13 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள 33 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் பொலிஸ் சிறப்புப் படையணிவுடன் இணைந்து 2024 ஒக்டோபர் 17 ஆம் திகதி தலைமன்னார் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது மற்றும் கச்சத்தீவு பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் முப்பத்து மூன்று கிலோ என்பத்து எட்டு கிராம் (33.88) கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

18 Oct 2024

காலி, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை கடற்படையினரால் அகற்றப்பட்டது

காலி, பத்தேகம பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அகலிய பாலம் மற்றும் தொடங்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2024 அக்டோபர் 14 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

16 Oct 2024

திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார்செய்யப்பட்ட நான்கு (04) கிராம் முந்நூற்று நாற்பது (340) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், பத்து போதை காப்ஸ்யூல்கள் (10) மற்றும் இருபது போதை மாத்திரைகளுடன் (20) இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

16 Oct 2024

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்ப கடற்படையின் உதவி

இலங்கைக்கு தென்மேற்கு திசையில்,தெவுந்தர முனையில் இருந்து 881 கடல் மைல் (சுமார் 1631 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் சுகவீனமடைந்த இலங்கையில் பல நாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் வெளிநாட்டுக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின் இன்று (2024 அக்டோபர் 15) அவரை கரைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

15 Oct 2024