இலங்கை இந்திய நட்பு மேம்படுத்தி கச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக நிறைவு

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா இன்று (மார்ச் 16) காலை மிக சிறப்பாக நிறைவடைந்தது. கடற்படை மூலம் புதிய ஆலயம். நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் மூன்றாவது திருவிழா இதுவாகும். இம் முரையும் இந்த நடவடிக்கைகளுக்காக யாழ். மறை மாவட்ட குருமுதல்வருக்கு மற்றும் மாவட்ட செயலாளருக்கு தேவையான வசதிகல் கடற்படை மூலம் வழங்கப்பட்டது.

16 Mar 2019