சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 30 கிலோ கடல் அட்டை மற்றும் ஓரு படகுடன் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘புவனேக’ வின் கடற்படை வீரர்களினால் முலங்காவில் பகுதியில் வைத்து 08 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மூவரூம் பொருள்களும் மேலதிக நடவடிக்கைளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதே தினம், நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ வின் கடற்படை வீரர்களினால் குச்சவெளி பொலிஸாரின் துணையுடன் 4 மீனவர்களையும் 2 கைவலைகள், 3 சுழியோடிகள் பயன்படுத்தும் உடைகள், 2 சுழியோடி முகமூடிகள், 15 ஒட்சிசன் சிலின்டர்கள் மற்றும் அவர்களால் இரக்கக்கண்டி கலப்பில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 8 கிலோ கடலட்டை என்பன சகிதம் கைது செய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.