மாலைதீவு கடலோர படைபிரிவின் ”ஹுராவீ ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

மாலைதீவு கடலோர படைபிரிவின் ”ஹுராவீ ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (பெப்ருவரி.26) வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

இதேவேளை கப்பலின் கட்டளைத்தளபதி கெப்டன் ஹஷான் ஷின்ன் அவர்கள் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களை மேற்கு கடற்படைக் கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும் இக்கப்பல் பெப்ரவரி 28ஆம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ளும்.