கடுமையாக உடல்நிலை பதிக்கப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டுவர கடற்படையினர் உதவி
 

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்துஆழ்கடலுக்கு இம்மாதம் 17ம் திகதி மீன்பிடிக்க சென்றிருந்தமீனவர்களில் ஒருவர் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவரை கரைசேர்க்க மீன்பிடிமற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு இலங்கைகடற்படையினர் இன்று (பெப்ரவரி,27) உதவியளித்தனர்.

நீரியல் வளத்துறை திணைக்களத்தின் வேண்டுகோளிற்கிணங்கஉடனடியாக செயற்பட்ட இலங்கை கடற்படை அதன் நந்தமித்ர எனும் கப்பலை மீன்பிடி படகை நோக்கி அனுப்பியது. கடற்படை கப்பல் நந்தமித்ர காலி கலங்கரை விளக்கிலிருந்து சுமார் 115 கடல் மைல் தொலைவில் வைத்து பாதிக்கப்பட்ட மீனவரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தது.காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர் மேலதிகசிகிச்சைகளுக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.