இழப்பீட்டு உதவியாக ரூபா ஒரு மில்லியன் கடற்படையினால் கையளிப்பு
 

இலங்கை கடற்படை யின் ‘நவிறு சவிய’ வைத்திய திட்டத்தின் கீழ் சேவையின் போது உயிரிழந்த இயந்திரவியல் பொறியியல் சிப்பாய் எம் அமரசேகரவின் மனைவிக்கு ரூபா ஒரு மில்லியன் இழப்பீட்டு உதவி வழங்கப்பட்டது.

இதற்கான காசோலை பெப்ரவரி 25 ஆம் திகதி இல. 385/பி, மத்திய பானம, பானமையிலுள்ள அவரின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது.

கடற்படை தளபதியின் நேரடி மேற்பபார்வையின் கீழ் இயங்கும் ‘நவிறு சவிய’ வைத்திய திட்டத்தின் கீழ் அங்கத்தவர்களுக்கு மரணம், கடுமையான நோய், பூரண மற்றும் பகுதி யளவு அங்கவீனம், பொதுவான ஆரோக்கிய குறைபாடுகள், சத்திர சிகிச்சி மற்றும் வைத்தய பரிசோதனைகள் போன்றவற்றிட்காக உதவி அளிக்கப்படிகிறது.