பாலைதீவு தேவாலய திருவிழாவிட்கு கடற்படை உதவி

பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின்வருடாந்த திருழாவை சிறப்பாக நடாத்த கடற்படையினர் பூரண உதவி வழங்கினர்.இத்திருவிழாவின் பிரதான திருப்பலி ஒப்புக்கொடுத்தல் யாழ் மறைமாவட்ட ஆயர் வண. பிதா. கலாநிதி. பி.ஜே. ஜெபரத்னம் அவர்களினால் பெப்ரவரி 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. ஆலயத்தின் பிரதமர் வண. பிதா வசந்த், ஏனைய பூசகர்கள் உட்பட 10000 ற்கும் அதிகமான பக்தர்கள் இவ்விழாவிட்கு கலந்துகொண்டனர்.

வடக்கு கடற்படை கட்டளை பிரதேச தளபதி ரியர்ட் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களின் வழிநடுத்தளில் கீழ் கடற்படையினர் திருழாவிட்கு வருகைதந்த பக்தர்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர், மின்சார வசதி மற்றும் கடற்கரை பிரதேச சுத்திகரிப்பு போன்ற வசதிகளை வழங்கியதுடன் அவ்விரு நாட்களில் விசேட கடற்படை உயிர்காப்பு மற்றும் வைத்திய குழுக்களையும் சேவையின் ஈடுபடுத்தினர்.