ருசியன் கடற்படையின் ”ஏபிரன் ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ருசியன் கடற்படையின் ”ஏபிரன் எனும் மீட்பு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (மார்ச்.03)  வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

அலுவலக குழாம் 138 பேர் அடக்கிய  இக்  கப்பலின் கட்டளைத்தளபதி கெப்டன் டெனிஸ் ஏ பர்க்ஸ்  அவர்கள் மற்றும் கெப்டன் சர்கெய் வீ இக்னெடோவ் அவர்கள் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்களை மேற்கு கடற்படைக் கட்டளை  தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும் அவர்கள் இன்று கடற்படைத் தளபதி சந்தித்தப் பின் அலுவலக குழாமுடன் கொழும்பு ,காலி, கண்டி ஆகிய பிரதேச சுற்றிப் பார்பதற்காக புறப்படுவார்கள். இக்கப்பல் மார்ச் 05ஆம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ளும்.