பறைவி தீவ்வில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது

நிலாவேலி பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 2 படகுடுகள், 12 ஒட்சிசன் சிலின்டர்கள், 3 சுழியோடிகள் பயன்படுத்தும் உடைகள், 2 சுழியோடி முகமூடிகள், 2 கைவலைகளுடன் 7 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ வின் கடற்படை வீரர்களினால் மார்ச் 2ம் மற்றும் 3ம் திகதியில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள், பொருட்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கோபாலபுரம் வனஜீவி அதிகாரியிடம் மற்றும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.