கடற்படை சுழியோடிகளினால் இரு சடலங்கள் மீட்பு
 

தென் கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட கடற்படை சுழியோடிகளால் அம்பாறை கொட்டுக்கல்லி பிரதேசத்தில் நீரின் மூழ்கி இறந்த இரண்டு பெண்களின் சடலங்களை நேற்று கலை (05) மீட்கப்பட்டது. ஏறாவூரைச்சேர்ந்த மேற்படி இரு பெண்களும் கடந்த வெள்ளிக்கிழமையாண்டு (04) நீரில் மூழ்கி காணாமல் சென்றுள்ளனர். பொத்துவில் பொலிசாரின் வேண்டுகோளுக்கினைய சடலங்களை மீட்ட கடற்படையினர் அவற்றை மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.