சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 18 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 18 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 09ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் மூவர் கோலங்கனத்தைக்கும் வேள்ளமுண்தலத்திற்கும் இடையே சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘பரன’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.இவர்களுடன் ஒரு படகும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டன.

அதேதினம் கற்பிட்டி ‘விஜய’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் பத்தலங்குண்டு கடளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட15 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் 5 படகுகள், 4 சுருக்கு மீன்பிடி வலைகள் மற்றும் 5 ஜி பி எஸ் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.