தொழில்நுட்ப பிரிவின் கடற்படையினர் 42 பேருக்காக டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 

கடற்படை தொழில்நுட்ப பிரிவின் 11 வது ஆட்சேர்பதற்கு உறிய 42 பேருக்காக சமுத்திர பொறியியல் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்ட விழா இன்று 11 இ.க. கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் அத்மிரால் சோமதிலக திசானாயக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அங்கு பிரதம அதிதியாக ரியர் அத்மிரால் டிரவிஷ் சின்னையா அவர்கள் கலந்துகொண்டார்கள்.

கடற்படைத் தலைமையகத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கடற்படையினரின் பெற்றோர்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.