இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது.
 

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியை நிறுவம் வகையில் அண்மையில் (மார்ச்.18) கொழும்பில் நடைபெற்ற தொடக்க பொதுக்கூட்டத்தில் 400ற்கும் மேற்பட்ட முப்படையின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டுடன் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் கே.ஏ.குணதிலக அவர்கள் கெளரவ அதிதியாக கலந்து கொண்டார்.

தொடர்ச்சியான தொழில்முறை அபிவிருத்தி, தனது உறுப்பினர்கள் மத்தியில் பயிற்சி மற்றும் வலையமைப்பு, ஆய்வு, வாதிடும், கொள்கை சூத்திரம் மற்றும் வள மேம்பாடு ஆகியவற்றை வழங்குவதே இக்கல்லூரியின் பிரதான நோக்கமாகும்.

இந்நிகழ்வின்போது ஒன்பது அலுவலக நிர்வாகிகள் மற்றும் ஒன்பது சபை உறுப்பினர்கள் ஆகியோர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்நிறுவனத்தின் தலைவர், அறுவை சிகிச்சை நிபுணர் ரியர் அட்மிரல் ஏன்ஈஎல்டப் ஜெயசேகர அவர்கள் பிரதம அதிதியால் பாராட்டப்பட்டார்.மேலும் நிர்வாகக் குழுவிற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சீ துறை ராஜா அவர்கள் கல்லூரியின் புரவலராக தெரிவு செய்யப்பட்டார்.

மருத்துவ துறைக்கு பொறியியல் எவ்வாறு பங்களிப்பு செய்தது என்று கோடிட்டுக் காட்டியதுடன் இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரிக்கு எதிர்காலத்தில் தனது ஆதரவை வழங்குவதாகவும் பாதுகாப்புச் செயலாளரின் உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது பாதுகாப்பு படைகளின் பிரமதம அதிகாரி உரையாற்றினார். அத்துடன் இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் www.slcomm.org என்ற இணையதளமும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.