225 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 328 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு பூனேவையிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷாவின் நடைபெற்றது.

பூனேவையிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷாவின் ஆரம்ப பயிற்சி பெற்ற 225 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 328 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு இன்று 02 நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வட மத்திய கட்டளை தளபதி ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் . இத்துடன் வட மத்திய கட்டளை உப தளபதி கொமதோரு உபுல் த சில்வா இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷாவின் கட்டளை தளபதி கெப்டன் அசங்க ரணசூரிய மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வெளியேறல் அணிவகுப்பு வீரர்களின் பெருந்திரளான குடும்ப உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், இந்நிகழ்வு கடற்படையின் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் மேற்கத்திய இன்னிசை வாத்தியம் ஆகியவற்றுடன் நிறைவு பெற்றது. அங்கே எச்பீஎன்பீ பிரேமசந்திர சிறந்த வீரருக்கான விருது வழங்கி வைக்கப்பட்டுடன். அனைத்துப் பாடங்கள் மற்றும் தொழில் சார் பாடங்களிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட வீரரியாக கேஎச்எச் ஜயகொடி மற்றும் எல்டப்எல் லொகுவிதான சிறந்த துப்பாக்கி சூட்டுக்கானும் டப்எம்எஸ் தபரேரா சிறந்த விளையாட்டு வீரருக்கான சின்னங்கள் மற்றும் பரிசு வழங்கப்பட்டன.

வெளியேறல் அணிவகுப்பு வீரர்கள் அழைத்த ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்கள் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு கடற்படையினர் பாரிய சேவையை வழங்கி வருகின்றனர். இவர்களின் சேவை விஷேடமானது. எமது நாட்டின் பூகோல அமைப்பை பார்க்கும் போது கடற்படையின் செயற்பாடு சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. எனவே தான் பாதுகாப்பு, பொருளாதாரம், நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு,இராஜதந்திர மற்றும் பயிற்சி போன்றவற்றின் போது முன்னுரிமை வழங்கப்படுகிறது. தற்போது வெளியேறிய வீரர்களும் தாய் நாட்டிற்காக பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் விடுத்தாருடன் கடற்படைக்கு தன் பிள்ளையை சேர்ந்த பெற்றோர்களுக்கு நன்றியை வழங்கப்ட்டது.