பிரதமரால் கடற்படை மிட்சிப்மென் 44 அதிகாரிகள் வெளியேற்று பிரியாவிடைக்கப்பட்டனர்

ஜோன் கோதலாவல பாதுகாப்பு பல்கழைக்கலத்தில் பட்டங்கள் பெற கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் பயிற்சி பெற்ற 29 மற்றும் 30 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 44 அதிகாரிகளின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இன்று (03) திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதமர் ரனில் விக்கிரம சிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் அதிகாரிகளினால் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பை பிரதமர் பார்வையிட்டதுடன், கடற்படை சம்பிரதாய முறைப்படி வாள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கடற்படையின் கலாச்சார குழுவினரால் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகளையும் கண்டுகளித்தார்.

அத்துடன் இந்நிகழ்வில் நீதி மற்றும் சாமதானம்,தக்ஷின அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன, கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி யமுனா விஜேகுணரட்ன, கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் நீல் ரொசேரோ, திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியின் கட்டளை அதிகாரி கொமடோர் வை. என். ஜயரட்ன, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வெளியேறிச் செல்லுகின்ற கடட் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் பிரதமர் ரனில் விக்கிரம சிங்க இங்கு உரையாற்றுகையில் :-

எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு கடற்படையினர் பாரிய சேவையை வழங்கி வருகின்றனர். இவர்களின் சேவை விஷேடமானது. எமது நாட்டின் பூகோல அமைப்பை பார்க்கும் போது கடற்படையின் செயற்பாடு சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. எனவே தான் பாதுகாப்பு, பொருளாதாரம், நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு,இராஜதந்திர மற்றும் பயிற்சி போன்றவற்றின் போது முன்னுரிமை வழங்கப்படுகிறது. தற்போது வெளியேறிய அதிகாரிகளும் தாய் நாட்டிற்காக பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமர் விடுத்தார்.

கடற்படையில் இணைந்து கொண்ட கடட் அதிகாரிகளில் சிறந்த கடற்படை கட்ட அதிகாரியாக மற்றும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றவராகவும் மிட்சிப்மென் அயி எஸ் பிரேமரத்ன தெரிவு செய்யப்பட்டு வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருது மிட்சிப்மென் எச் எம் வயி என் சேனாரத்ன  பெற்றுக் கொண்டார். சிறந்த துப்பாக்கி சூட்டுக்கான விருது மிடசிப்மென் எல் எச்எம் அயி ஹக்கலவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.