இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய 04 மீனவர்கள் கைது
 

டெல்ப் தீவின் தென் மேற்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட04 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் நேற்று 04 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், டோலர் படகு மேலதிக நடவடிக்கைகளுக்காக கங்கசந்துறை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.