சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கற்பிட்டி ‘விஜய’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் பெரிய அரிச்சல் மற்றும் இப்பன்திவு கடளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் 5 படகுகள்,  தங்குஸ் மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களும்  பொருள்களும் புத்தளம் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.