இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

“மகினாமி” மற்றும் “சுசினாமி” எனும் இரு ஜபானிய  கடற்படைக் கப்பல்கள் இன்று 11 கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

இதேவேளை, ஜபானிய 3 வது பாதுகாப்பு பிரிவின்  கட்டளைத்தளபதி கெப்டன் டகேஷி யொஷிஒகா  மற்றும் இரு கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கொமாண்டர் மசனோரி அமைமினிய, மற்றும்,ஜபானிய கடலோர பாதுகாப்பு பிரிவின் கட்டளை அதுகாரி கொமாண்டர் மசஹரு பூஜிமொடோ ஆகிய அதிகாரிகள் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படைக் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

 மேலும் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இச் சந்தர்பத்திற்கு ஜபானிய துதுவர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் மொடொட்சுகு ஷிகெகாவா அவர்களும் கலந்து கொண்டார்.

இக்கப்பல் இங்கு தரித்திருக்கும்வேளையில் இருதரப்பு உறவுகளை அதிகரிக்கும் வகையிலான பல்வேறு நிகழ்கவுகளில் பங்கேற்கவுள்ளனுடன் இக்கப்பல் மார்ச் 14ஆம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ளும்.