இலங்கை கடற்படையின் சுழியோடிகள் குவாம் தீவில் பயிற்சி
 

அமெரிக்க கடற்படையின் வெடிக்கும் தன்மை உடைய போர்த்தளவாடங்களை செயலிழக்கச் செய்வதற்கான நடமாடும் அலகினால் இருநாட்டு கடற் படைகளுக்கும் இடையிலான நிபுணத்துவ பரிமாற்ற பயிற்சியாக இலங்கை கடற்படையின் சுழியோடிகள் 20 பேருக்கான பயிற்சிகள் பசுபிக் தீவான குவாம் பகுதியில் இடம் பெற்று வருகின்றது.

இதன் மூலம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் விடுதலைப் புலிகளினால் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கான நிபுணத்துவத்தை இலங்கை கடற்படியினருக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப் படுகிறது.

இம்மாதம் 7ம் திகதி ஆரம்பமான இரு நாடுகளினதும் கடற்படைகளுக்கு இடையிலான நிபுணத்துவ பரிமாற்ற அடிப்படையில் இடம்பெறும் இப்பயிற்சியில் சுளியோடல் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பிரயோக ரீதியான பயிற்சிகள் உள்ளடங்கியுள்ளும். ஏப்பில் மாதம் 13 ம் திகதி செய்யப்பட்ட பயிற்சியில் பெசிபிக் கடலில் விழுங்க “டொகாய் மாரு” என்ற ஜபானிய போர் கப்பலில் 75 வது படை பிரிவின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வை மீது செய்தனர்.

(Photo courtesy: https://www.dvidshub.net)