3 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்ப கடற்படையினர் உதவி

இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட 3 இந்திய மீனவர்கள் தமது தாயகம் திரும்ப இலங்கை கடற்படையினர் உதவியளித்துள்ளனர். இவ்விந்திய மீனவர்கள் மூவரும் காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள சர்வதேச கடல் எல்லைப் பரப்பில் வைத்து இந்திய கடலோர பாதுகாப்பு படையின் ‘அபீக்’ கப்பல் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். இதன் போது இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் “சீஜி 48” படகு கலந்துகொண்டது.