சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 20 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் மூவர் சின்னசவ்காடி படல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் வாகறை ‘காச்ஷிப’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் ஒரு படகும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் மட்டக்களப்பு கடற்றொழில் பரிசோதனை அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

அதேதினம் புல்முட்டை ‘ரன்வெலி’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் ஜின்னபுரம் கடளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் ஒரு படகும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் புல்முட்டை பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.