சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 03 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கங்கசங்துறை ‘உத்தர’ கடற்படை தளத்தின் பீ 4444 படகுவியால் நேற்று 21 சுண்டிகுளம் கடல் பரப்பில் சட்டவிரோதமாக சேகரத்த 10 கடல்லட்டையுடன் 03 உள்நாட்டு மீனவர்கள் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களுடன் படகு ஒன்றும் 02 சோடி சுழியோடும் காலணிகள் , 10 ஒட்சிசன் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதனை அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.