அமெரிக்க கடற்படையின் பெசிபிக் கட்டளை பீடத்தின் சிறப்பு நடவடிக்கை பணியத்தின் தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

அமெரிக்க கடற்படையின் பெசிபிக் கட்டளை பீடத்தின் சிறப்பு நடவடிக்கை பணியத்தின் தளபதி ரியர் அட்மிரல் கொலின் கில்ரெயன் நேற்று முன்தினம் (22) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார். இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்தப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினட் கேணல் ரொபேட் ரோஸ் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.