சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 30 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 30 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 23 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் முப்பதுவர் சுண்டிகுளம் மற்றும் வெத்தக்கேனி இடையில் கடல் பரப்பில் சட்டவிரோத கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட வேளையில் ‘உத்தர’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் 2264 கடல்அட்டைகள், 10 படகும் 22 சோடி சுழியோடும் காலணிகள் , 102 ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் 25 சுழியோடி முகமூடிகள், 10 ஜி பி எஸ் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதனை அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

அதேதினம் மட்டகளப்பு ‘கொடுவமெத’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் பெரிய பொட்டாய் கடல் பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் ஒரு படகும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் பொருள்களும் மட்டக்களப்பு பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.