சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 25 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 5 வர் இலுப்புகாடவயி மற்றும் வெடிதிலதீவு இடையில் கடல் பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட வேளையில் நச்சிகுடா ‘புவனெக’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் தடைசெய்யப்பட்ட 04 வலைகள், படகு ஒன்றும், ஜி. பி. எஸ் உபகரணமும், 40 நண்டுகள் கிலோவுடன் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் 24 ம் திகதி மட்டகளப்பு ‘கொடுவமெத’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் நவத்கிடா கடல் பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீனவர்கள் வலையுடன் கைதுசெய்யப்பட்டனர்.இவர்களுடன் ஒரு படகும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் பொருள்களும் மட்டக்களப்பு பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.