விருசர வரப்பிரசாத அட்டைகள் வழங்கி வைப்பு 06ம் கட்டம் ஹம்பந்தொட்டையில்
 

விருசர வரப்பிரசாத அட்டை வழங்கி வைக்கும் வைபவம் 06ம் கட்டம் இன்று (, 30) மாகம் ருஹுணுபுர சர்வதேச கேட்போர்கூடத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையின் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் இராணுவத்தினர் சார்பில் 642 அட்டைகளும் கடற்படையினர் சார்பில்194 அட்டைகளும் விமானப்படை சார்பில் 91 அட்டைகளும் பொலிஸ் சார்பில் 67 சிவில் பாதுகாப்புப் படை சார்பில் 08 அட்டைகளுமாக மொத்தம் 1002 பயனாளிகளுக்கான விருசர அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயளாலர் ஏஜீபீ கித்சிறி அவர்கள், கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள்,தரைப்படை உப தளபதி மேஜர் ஜனரால் மிலிந்த பீரிஸ், விமானப்படை உப தள்பதி வைஸ் மார்ஷல் ரணில் குருசிங்க,ரணவிரு சேவா அதிகாரி சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா கடற்படைத் பணிப்பாளர் ஜனரால் சேவை ரியர் அத்மிரல் எரிக் ஜயகொடி, தென் பிராந்திய கடற்படைத தளபதி ரியர் அத்மிரல் நிரல் சரத்சேன,மாத்தறை மற்றும் ஹம்பந்தொட்டை உப பொலிஸ் சுமார் சுமித் எதிரிசிங்க, சிவில் பாதுகாப்பு தினைக்களத்தின் கர்னல் எப் எம் கருனாபால, மூப்படை சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விருசர அட்டை வழங்குபவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்கத்தவர்கள் பலர் கலைந்து கொண்டனர்.