வெள்ளத்தினால் பாதிக்கப்ப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் பங்களாதேஷ் கப்பல் கொழும்பு துறை முகத்திற்கு வருகை
 

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் பங்களாதேஷ் கடற்படையின் பங்கபந்து கப்பல் இன்று 05 கொழும்பு துறை முகத்திற்கு வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

200 மிலியன் பெறுமதி நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வின் விபத்து முகாமைத்து அமைச்சின் வெயளாலர் எஸ்.எஸ் மியனவல அவர்கள், இலங்கைக்கான பங்களதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் ஹஸன், மேற்கு கடற் பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கே. கே. ஜே. டி சில்வா, இலங்கையிலள்ள பங்களதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு இணைப்பாளர் கொமடோர் அஸ்லம் பர்வேஷ் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹஸீனாவின் ஆலோசனைக்கமைய இந்த நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் உடைகள்,பெருந்தொகை மருந்து பொருட்கள் ஜெனரேட்டர்கள், கூடாரங்கள் மற்றும் சிறுவர் உணவு வகைகள் என்பனவே இதில் அடங்குள்ளன. இலங்கைக்கும் பங்களதேஷத்திற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானதும் பலமானதுமாகும் ஆகவே இதை மேலும் அதிகரிக்காக நல்ல வாய்ப்பு என குறிப்பிடுவார்கள். இக் கப்பல் 08 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ளும்