கடற்படைனரின் நீர் மற்றும் நிலப் பகுதி படை நடவடிக்கைப் பாடனேறி நிறைவு

கடற்படையின் ரோந்து நடவடிக்கைகளுக்கான பிரிவினால் 2 வது முறையாக வாகரை கடலோர பகுதிகளில் முள்ளிக்குளம் இலங்கை கடற்படைக்கப்பல் ‘காசியப்ப’ கடற்படை நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட நீர் மற்றும் நிலப் பகுதி படை நடவடிக்கைப் பாடனேறி இலங்கை கடற்படைக்கப்பலான ‘பரண’ கடற்படை முகாமில் கடந்த ஏப்ரல், 27ம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்ட அண்மையில் 09ம் திகதி நிறைவுக்கு வந்தது.

நீர் ,நிலப் பகுதிகளுக்கான படை நடவடிக்கை, முகாமிடல் பயிற்சி ஒத்திகைகள் , இணைந்த பயிற்சி ஒத்திகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இவ் ஏழு வார கால படை நடவடிக்கைப் பயிற்சி நெறியில் கடற்படையைச் சேர்ந்த 11 அதிகாரிகள் மற்றும் 108 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இப்பயிற்சி நிறைவு விழாவில் கடற்படையின் ரோந்து நடவடிக்கைகளுக்கான பிரிவின் பணிப்பாளர் கொமதோரு உதேனி சேரசிங்கவின் அழைப்பின் பேரில் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேற்படி நிகழ்வில் சிரேஸ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.