அவுஸ்திரேலிய கடற்படையின் ‘எச்எம்ஏஎஸ் பேர்த் கப்பலில் வரவேற்பு விழா

நல்லெண்ண நோக்கில் 19 ம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் ‘எச்எம்ஏஎஸ் பேர்த் கப்பலில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்துடன் இவ்விழாவில் பிரதான அழைப்பு அததியாக பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து கொண்டார். இதைவேலை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு பிரைஸ் ஹட்சென் மற்றும் துதுவர்கள், பாதுகாப்பு ஆலோசர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன திருமதி யமுனா விஜேகுணரத்ன கடற்படைத் தலையினர் பிரதானி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் மற்றும் அவர்களின் மனைவிகளும் இந் நிகழ்வில் பங்குபற்றுள்ளனர்.

இவ் விழாவிற்கு வந்துள்ள அனைவர்ம் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு பிரைஸ் ஹட்சென் மற்றும் கப்பலின் கட்டளைத்தளபதி ஆகியோர் வரவேற்றனர். மேலும், கடற்படையினருடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினாரல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் அவுஸ்திரேலியப் போர்க்கப்பலின் மாலுமிகள் மற்றும் இலங்கை கடற்படையினர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.