‘நியூ ஓர்லின்ஸ்' கப்பலின் சிப்பந்திகள் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்
 

‍இம்மாதம் 24ம் திகதி வருகை தந்த அமெரிக்கக் கடற்படை போர்க்கப்பலான “நியூ ஓர்லின்ஸ்’ இன் கடற்படை சிப்பந்திகள் 25மற்றும் 26ம் திகதிகளில் வெலிசர கடற்படைத்தள மைதானத்தில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

இதற்கமைய அவர்கள், வீரர்களின் திறமைகளை பறைசாற்றும் பேஸ்பால், கூடைப்பந்து, உதைபந்து மற்றும் வலைப்பந்து போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் அமெரிக்கக் கடற்படைக் கப்பலின் அதிகாரிகள், இலங்கை கடற்படையின் பேஸ்பால், கூடைப்பந்து, உதைபந்து மற்றும் வலைப்பந்து கலகங்களை பிரதிநித்துவப் படுத்தும் அதிகாரிகள், மற்றும் கடற்படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.