“ஜகோர் பெலசோ” எனும் ரஷ்ய கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

ரஷ்ய தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கான “ஜகோர் பெலசோ” எனும் போர்க்கப்பல் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று (27) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டன.

சுமார் 4 நாட்கள் இங்கு தரித்திருக்கவுள்ள குறித்த இக்கப்பலில் வருகை தந்த சிப்பந்திகள் பல்வேறுபட்ட பயிற்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளனர் வருகை தந்த இக்கப்பல் இம்மாதம் 30ஆம் திகதி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.