9.3 கிலோ கேரளா கஞ்சா மற்றும் அதனை வைத்திருந்த நான்கு பேரைக் கைது செய்ய கடற்படையினர் உதவி
 

மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து 9.3 கிலோ கிராம் கேரளா கஞ்சாப் பொதிகள் மற்றும் அதனை வைத்திருந்த நான்கு பேர் ஆகியோரைக் கைது செய்ய கடற்படையினர் உதவி செய்தனர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் வருண முகாமில் கடமையாற்றும் படை வீரர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கொழும்பு கோட்டே ரயில் நிலையத்தருகே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் காணப்பட்ட 4 கிலோ கிராம் கஞ்சாப் பொதிகளும் கைப்பற்றபட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு கோட்டே பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படைக் கப்பல் ரங்கல்ல மற்றும் கெமுனு முகாம்களை சேர்ந்த வீரர்களால் வத்தளைப் பிரதேசத்தில் ஒருவர் 3.2 கிலோ கிராம் கஞ்ச பொதிகளுடன் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக பேலியகொடை விஷேட பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப் பட்டார்.

இதேவேளை, தலை மன்னாரில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா மற்றும் வந்களியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புஸ்ஸதேவ முகாம்களை சேர்ந்த வீரர்கள் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் பேசாலையைச் சேர்ந்தசந்தேக நபர் ஒருவர் சுமார் 2.1 கிலோ கிராம் கஞ்ச பொதிகள் சகிதம் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார்.