விடுதலை செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்ப கடற்படையினர் உதவி
 

விடுதலை செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்கள், தமது தாயகம் திரும்ப இலங்கை கடற்படை நேற்று (28) உதவியளித்தது. இலங்கை கடற் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள் இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 77 பேரும் காங்கேசன்துறைக்கு வடக்கே சர்வதேச கடல் எல்லைக் கோட்டு பகுதியின் “ராணி அப்பக்கா” மற்றும் “அமேயா” ஆகிய இந்தியக் கடலோரக் காவல் படை கப்பல்களிடம் கையளிக்கப்பட்டனர். இப்பணிக்கு இலங்கை கடற்படையின் ரணகஜ, பீ 481 மற்றும் கடலோர பாதுகாப்பு படை படகு சீஜீ 47 ஆகியன ஈடுபடத்தப்பட்டன.