கடற்படை தளபதியினால் தலாவையில் நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் திறந்து வைப்பு
 

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை, மேற்கொள்ளும் சமூகசேவை நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக தலாவை மகா வித்தியாலத்தில் நிறுவிய “ரிவேர்ஸ் ஒச்மொசிஸ்” நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் இன்று (29) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் ஒன்லைன் தொழிநுட்பம் மூலம் கலந்து கொண்டார்.

கடற்படை தளபதியின் ஒரு எண்ணக்கருவில், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப திறனைக் கொண்டு இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரத்திம், பரந்தளவில் சிறுநீரக நோய் காணப்படும் தலாவை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடற்படையின் பெருந்தன்மைமிக்க குறித்த இச்சேவையின் பலனாக அப்பாடசாலையின் 1800 பிள்ளைகள், 150 ஆசிரியர்கள் மற்றும் அப்பிரதேசத்திலுள்ள 350 குடும்பங்களும் பயன்பெறவுள்ளனர்.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் தனது ஒன்லைன் உரையின் போது.. கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் இதுபோன்ற உயர் தரத்தில் குறைந்த செலவில் மேலும் 50 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வட மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைக்கவுள்ளதாக தெரிவித்தார்..அத்துடன் பதவிய மற்றும் சிறிபுர ஆகிய பிரதேச மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை அபிவிருத்தி செய்ய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மின்வலுவுக்கு பதிலாக சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரங்களை அமைக்கவுள்ளதாகவும் தெரவித்தார்.

இந்நிகழ்வில், மஹா சங்க உறுப்பினர்கள், வடமத்திய கடற்படை கட்டளை பிரதேச தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

.