பதினேழு அதிகாரிகள் கடல் மற்றும் கடல்சார் அகாடமியில் ஆணையளிப்பு பெற்றனர்
 

பயிற்சி முடித்த, 2016 ன் முதலாம் பெண் அதிகாரி ஆட்சேர்ப்பின் பன்னிரண்டு அதிகாரிகள் மற்றும் ஐந்து சேவை ஆட்சேர்ப்பின் அதிகாரிகள் திருகோணமலை கடல் மற்றும் கடல்சார் அகாடமியின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் இன்று (30) நடந்த ஆணையளிப்பு விழாவின் போது புதிதாக ஆணை பெற்றனர். இந்நிகழ்விட்கு கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் தளபதி ரியர் அட்மிரல் திரவிஸ் சின்னையா அவர்கள் தலைமை தாங்கினார். கடல் மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளை அதிகாரி கொமொடோர் ரோஹித்த பெரேரா மற்றும் கடற்படை அதிகாரிகளும் புதிதாக ஆணை பெற்ற அதிகாரிகளின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் போது திறமை காட்டிய அதிகாரிகளுக்கு விருதுகள் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அனைத்து பாடங்களிலும் அதி கூடிய புள்ளி பெற்ற சப் லெப்டினன்ட் எஸ்டவ்ஜிஎம்எஸ் விஜேகோன் சிறந்த சேவை ஆட்சேர்ப்பு அதிகாரியாக விருதினை பெற்றுக் கொண்டார்.மேலும், குறிப்பிட்ட இந் நிகழ்வுகடற்படை கலாச்சார மற்றும் பேண்ட் வாத்திய பிரிவினரின் கன்வர் நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.