எஸ்எல்டீ ஸ்பீட்அப் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கடற்படைக்கு சாம்பியன் விருது
 

அண்மையில் நடைபெற்ற எஸ்எல்டீ ஸ்பீட்அப் சைக்கிள் ஓட்டப்போட்டியில் இலங்கை கடற்படையின் சாதாரன மாலுமி தர்ஷன பிரசாத் சம்பியன் பட்டத்தினை பெற்றுக் கொண்டார். 780.5 கிமீ தூரத்தைக்கொண்ட இப்போட்டி இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை சைக்கிள் ஓட்ட சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சிறந்த இளம் சைக்கிளோட்டப் போட்டியாளருக்கான விருதினையும் மிக சிறந்த குழுவுக்கான இரண்டாம் இடத்தினையும் கடற்படை சைக்கிளோட்ட வீரர்களினால் வெற்றிகொள்ளப்ட்டது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் இன்று (3) கடற்படை தலைமையகத்தில் நடந்த பாராட்டு நிகழ்சசியின் போது இலங்கையின் மிக நீண்ட சைகில் ஓட்டப்போட்டியாக கருதப்படும் இப்போட்டியில் பல சாதனைகள் நிலைநாட்டிய கடற்படை சைகில் ஓட்டவீரர்களை பாராட்டி கௌரவித்தார். கடற்படைக்கு பெருமை சேர்க்க உழைத்த பயிற்றுவிப்பாளர் மற்றும் கடற்படை சைக்கிலோட்ட கழகத்தின் தலைவர் உட்பட மற்ற அதிகாரிகளுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கும் வீரர்களின் வெற்றிக்காக போட்டி ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார். இதேவேளை சாதாரண மாலுமி அவிஷ்க மெடொன்சா இப்போட்டித்தொடரின் மிக சிறந்த இளம் வீரருக்கான விருதினை வென்றமையும் குறிப்பிடத்தக்கது.